Home உலக செய்திகள் லண்டனில் 150 பானைகளில் பொங்கும் “பொங்கல் பெரு விழா”!

லண்டனில் 150 பானைகளில் பொங்கும் “பொங்கல் பெரு விழா”!

239
0

தமிழர் திருநாளான “தைப்பொங்கல்” நிகழ்வை முன்னிட்டு வழமை போல் இம்முறையும் ஒரே இடத்தில் மக்கள் கூடி பிரித்தானியாவில் மாபெரும் பொங்கல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று KP Centre, Kenmore Avenue, Harrow, Middlesex, HA3 8LU எனும் இடத்தில் காலை 9 மணிக்கு….

வீரத்தமிழர் முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெறு இந்த விழாவில் இம்முறை 150 பானைகளில் பொங்கல் இடம்பெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொங்கல் விழாவில் 7 குடும்பங்களால் 75 பானைகளில் பொங்கல் செய்யப்பட்டிருந்தமையும், இது தாயகத்தில் பொங்கல் செய்வது போல மண்டபத்திற்கு வெளியிலே கல்லாலான அடுப்பில் விறகு அடுப்பில் பொங்கல் செய்யப்படுவதனால் தாயகத்தில் நிற்பது போன்ற உணர்வைக் கொடுப்பதும், இந்த நிகழ்வில் அதிக மக்கள் கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி தமிழரின் பாரம்பரியதும், தனித்துவமானதுமான தமிழர் திருநாள் கொண்டாட்டங்களை காண வேற்றினத்தவர்களும் வருகைதருவது சிறப்பான விடையமாகும்.

இம்முறை பொங்கல் பெருவிழாவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட (150) பானைகளுக்கான இடம் மட்டுமே இருப்பதால் முன்கூட்டியே பதிவுகளை செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தோடு இந்த நிகழ்விற்காக ஏற்பாட்டாளர்களால் ஒரே மாதிரியான பானை, அடுப்பு உட்பட்ட பொங்கல் பொதி வழங்கப்படும். ஒரு பொங்கல் பொதியின் விலை £30 பவுண்சுகள் மட்டுமே! (£30 பொங்கல் பொதியினுள் பானை, அகப்பை, அரிசி, பால், சர்கரை, தண்ணீர், பழங்கள், படையல் பொருட்கள், படையல் தட்டு, வாழையிலை மற்றும் பொங்கல் வைப்பதற்கான விறகடுப்பு வழங்கப்படும்)

இம்முறை நிகழ்வில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் பேராசிரியர் கல்யானசுந்தர்ம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

மண்டப நிகழ்வுகளுக்கான அனுமதி மற்றும் வாகன தரிப்பிடம் முற்றிலும் இலவசம் என்பதோடு இந்த நிகழ்விற்கு வருகைதரும் தமிழ்மக்களை தயவுசெய்து தமிழர் கலாச்சார பண்பாட்டு உடையணிந்து வருமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.