Home செய்திகள் உடலில் தீ மூட்டியபடி தொடரூந்து முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!

உடலில் தீ மூட்டியபடி தொடரூந்து முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!

119
0

தனது உடலில் தீ மூட்டியபடி இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடரூந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (13/01) காலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கடை உரிமையாளரும், 32 வயதுடைய இளம் குடும்பஸ்தருமான இராஜசுந்தரம் இராஜசீலம் என்பவரே இறந்துள்ளார்.

நேற்று முந்தினம் வடமராட்சிப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீயிட்டு கொழுத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக குறித்த நபரை காவல்துறையினர் தேடி வந்ததாகவும், கூறப்படுகிறது.

இந்த நிலையில் இராஜசீலனின் இறப்பு பலதரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.