
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் காவல்துறையினருடன் இணைந்து இராணுவத்தினரும் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்று அதிகாலை 5:30 மணி முதல் நடைபெறும் இத் தேட்ல் நடவடிக்கையில் இதுவரை சந்தேகத்திற்கு இடமான பொடுட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்பதோடு எவரும் கைது செய்யப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தேடுதல் நடவடிக்கை வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கஇயின் ஓர் அங்கமே என இராணுவமும், காவல்துறையினரும் கூறுகின்றனர்.
ஆனால், வழக்கமாகவே தமிழர்களின் தனித்துவமான திருநாட்கள், கொண்டாட்டங்கள், தமிழ்த் தேசிய நிகழ்வுகள் போன்ற காலங்களில் படையினரை வீதிகளில் இறக்கி அச்சத்தை ஊட்டி, மக்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் சிரமங்களை கொடுத்துவருவது அறிந்ததே.
இது போன்றே அண்மிக்கும் தமிழர் திருநாளாம் “தைப்பொங்கல்” கொண்டாட்ட நிகழ்வுகளை குழப்பும் நோக்கோடு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது.