Home செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டம் – மாவை ஒதுங்குவது தவறு:

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டம் – மாவை ஒதுங்குவது தவறு:

138
0

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டமாக இருக்கும் இன்றைய சூழ் நிலையில், மாவை சேனாதிராஜா போன்ற பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குவது தவறானது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் இழப்பாக அமையும். என தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கட்சியின் தலைவரும் அனுபவம் மிக்கவருமான மாவை சேனாதிராஜா நிச்சயமாக யாழ்.மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதுடன் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிட வேண்டும். அதேவேளையில், கிழக்கில் இரா.சம்பந்தன் ஐயாவும் போட்டியிட வேண்டும். அவர் போட்டியிடா விட்டாலும் இழப்பு ஏற்படும்.

ஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இளைஞர்கள் வரவேண்டும். அதேவேளையில் வயது மூத்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பது வெற்றுக் கோசமாகவே இருக்கின்றது. என்றார்.