Home செய்திகள் வாழச்சேனையில் துப்பாக்கியுடன் இருவர் கைது!

வாழச்சேனையில் துப்பாக்கியுடன் இருவர் கைது!

128
0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கல்மடு விநாயகபுரம் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காவல்துறையினர் நடாத்திய தேடுதலின் போது துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தொடராக திகிலிவெட்டை பிரதேசத்தில் மேலும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவரிடம் இருந்து T-56 ரக துப்பாக்கியும் அதற்கான 27 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளது.

கைதான இருவரில் ஒருவர் முன்னாள் போராளி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.