Home செய்திகள் முல்லைத்தீவில் இளம் தம்பதிகளை மோதித் தள்ளிய கடற்படை வாகனம் – கணவன் பலி! மனைவி படுகாயம்!!

முல்லைத்தீவில் இளம் தம்பதிகளை மோதித் தள்ளிய கடற்படை வாகனம் – கணவன் பலி! மனைவி படுகாயம்!!

71
0

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இளம் தம்பதிகளை வேகமாக வந்த இலங்கை கடற்படையினரின் வாகனம் ஒன்று மோதித் தள்ளியதில் கணவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் துனுக்காய் – ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கேஜீவன் (28-வயது) உயிரிழந்த நிலையில் அவரது மனைவி கே.வினுஜா படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.