Home செய்திகள் வடமாகாண மும்மதத் தலைவர்களை சந்தித்த வடக்கு ஆளுநர்!

வடமாகாண மும்மதத் தலைவர்களை சந்தித்த வடக்கு ஆளுநர்!

69
0

வடமாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மும்மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடியதோடு ஆசிகளையும் பெற்றிருந்தார்.

இதன் காரணமாக மதரீதியிலான பிரச்சனைகள் எளாத வரையில் இன்றைய தினம் ஏனைய மும்மதங்களையும் சார்ந்த நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌவி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களிடம் கேட்டறிந்த ஆளுநர், தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளை அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.