Home செய்திகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமனம்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமனம்!

99
0

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு காலப்பகுதியில் பதவி வகித்தவர் என்பதோடு, தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.