
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நான்கு புதிய தூதுவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவராகவும், பேராசிரியர் நளின் டி சில்வா மியான்மருக்கான இலங்கைத் தூதுவராகவும், ஏ.எல்.ஏ. அஸீஸ் நோர்வேக்கான இலங்கைத் தூதுவராகவும், மல்ராஜ் டி சில்வா ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.