Home செய்திகள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

78
0

கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என வலியுறூத்தியும் யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக தடுத்துவைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த மாத இறுதியில் உயிரிழந்தார். 19 வயதில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 27 ஆண்டுகள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், கடுமையான சுகயீனத்துக்குள்ளான நிலையில், உரிய சிகிச்சைகள் சீராக வழங்கப்படாமை காரணமாக உயிரிழந்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையிலேயே இன்றைய இப் போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.