Home செய்திகள் கமால் குணரட்ணவை சந்தித்த நோர்வே தூதுவர்:

கமால் குணரட்ணவை சந்தித்த நோர்வே தூதுவர்:

82
0

நோர்வேயின் தூதுவர் Trine Jøranli Eskedal இலங்கையின் பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவஇ சந்தித்து உரையாடியுள்ளார்.

நேற்றைய தினம் (08/01) இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

இதன் போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் துரித கதியில் அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களை இயல்பான வாழ்க்கைக்குள் விரைவில் கொண்டு செல்லவேண்டும் என நோர்வே தூதுவர் கேட்டுக்கொண்டதோடு, அதற்கான உதவிகளை செய்ய நோர்வே தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் போதைவஸ்து கடத்தலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு திட்டங்களை விரிவுபடுத்தவும் தமக்கு உதவிகள் தேவைப்படுவதாக கமால் குணரட்ண தெரிவித்ததாக கூறப்படுகிறது.