Home செய்திகள் யாழில் நடைபெற்ற “தமிழமுதம் விழா”

யாழில் நடைபெற்ற “தமிழமுதம் விழா”

72
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழமுதம் விழா நேற்று (08/01) புதன்கிழமை நடைபெற்றது.

தமிழின் தனித்துவத்தையும், பெருமையையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற மேற்படி விழா இன்று காலை-08.15 மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவன்- அம்மன் கோயில் முன்றலில் மாபெரும் கலாசார ஊர்வலப் பவனியுடன் ஆரம்பமாகியது.

கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், குதிரையாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவங்கள் அரங்கேறிப் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.

குறித்த கலாசார ஊர்வலப் பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் மங்கல விளக்கேற்றலுடன் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.