Home உலக செய்திகள் துருக்கியில் யாழ் இளைஞன் படுகொலை!

துருக்கியில் யாழ் இளைஞன் படுகொலை!

134
0

ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 24 ம் திகதி அவரை கொலை செய்யப்பட்டுள்ளார்,

நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அவர்களுக்குள் நடந்த கருத்து மோதல் காரணமாக அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பயண முகவர்கள் பெருந்தொகை பணங்களை பெற்று அதனூடாக தாம் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, தம்மை வாழ வைத்து தமது உயிர்களை கையில் பிடித்தவாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் நபர்களை கண்டுகொள்ளாதது மிகவும் வேதனைக்குரியது.

பாதுகாப்பற்ற வழிகள் ஊடாகவும், உயிரின் பெறுமதி தெரியாத மிருகத்தனமான நபர்களை இடைத் தரகர்களாக வைத்திருப்பதாலும் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.