Home செய்திகள் காற்றாலை விவகாரம் – சம்மதித்தால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீதான வழக்கு தள்ளுபடியாம்…!

காற்றாலை விவகாரம் – சம்மதித்தால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீதான வழக்கு தள்ளுபடியாம்…!

118
0

மறவன்புலவு காற்றாலை அமைப்பது தொடர்பாக பல்துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை அறியும் சிறப்பு கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலைமையில் நேற்றைய தினம் 7/1/2020 காலை 11.30 மணிக்கு யாழ் மாவட்ட செயகத்தில் இடம் பெற்றது. 

இதந் போது, காற்றாலை நிறுவனத்தினர் ஒரு காற்றாலையை மட்டும் அகற்றுவதெனவும் மற்றைய காற்றாலையை சிறிது தூரம் அதே காணிக்குள் தள்ளி அதே காணிக்குள் நிறுவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதெனவும் உறுதியளித்துள்ளனர்.

ஆனால் இதற்கு நாங்கள் உடன்பாடில்லை என்று அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். இருப்பினும் அதற்கு சாதகமான பதில் எதுவும் எமக்கு இதுவரை வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.

இதற்கு சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ நிமலரோகன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குடியிருப்புக்குள் இருக்கும் இரண்டு காற்றாலை கம்பங்களும் அகற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் யாழ் அரச அதிபர் வேதநாயகன் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மத்திய சுகாதார அதிகாரசபை அதிகாரிகள் சாவகச்சேரி பிரதேச சபை அதிகாரிகள்  பிரதேச செயலக அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் யாழ் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.