Home முக்கிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள றஞ்சன் ராமனாயக்கவின் உரையாடல் ஒலிப்பதிவுகள் – முக்கிய வழக்குகளில் மேலும் பலர் சிக்கும்...

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள றஞ்சன் ராமனாயக்கவின் உரையாடல் ஒலிப்பதிவுகள் – முக்கிய வழக்குகளில் மேலும் பலர் சிக்கும் நிலை!

167
0

கடந்த அரசாங்கத்தின் போது நீதிபதிகள் , பொலிஸ் உயர் அதிகாரிகள் , எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு நபர்களுடன் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல்கள் தொடர்புடைய ஒலிப்பதிவுகள் வெளியாகி கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பான வழக்கு விவகாரம் தொடர்பாக நீதிபதியொருவருடன் மேற்கொள்ளும் உரையாடல், மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு பிரிவு உயர் அதிகாரியுடன் மேற்கொள்ளும் உரையாடல் உள்ளிட்டவையும் வெளியாகியுள்ள நிலையில் இவை தொடர்பான வழக்குகளில் புதிய தகவல்களும், மேலும் சிலர் கைதாகும் நிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவரின் வீட்டிலிருந்து பல சீ.டிக்கள் மீட்கப்பட்டிருந்ததோடு அங்கிருந்து மீட்கப்பட்ட சட்டவிரோத கைத்துப்பாக்கி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.