Home முக்கிய செய்திகள் அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழி பாடசாலை – நாடளாவிய ரீதியில் 1000 பாடசாலைகள்: மஹிந்த

அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழி பாடசாலை – நாடளாவிய ரீதியில் 1000 பாடசாலைகள்: மஹிந்த

138
0

நாடளாவியரீதியில் 1,000 பாடசாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்படும் எனவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகளாக அவை அமையும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் இன்று (06/01) திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

குறிப்பாக ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புடன் அழிந்துபோன தேசிய பௌத்த கல்வி முறையை மேம்படுத்துவதற்கு மகா விகாரையுடன் தொடர்புபட்ட பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.

புதிய மக்கள் மய கொள்கையின் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கல்வியில் பயனுள்ள மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய இலங்கையில் இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கின்ற நிலைமையில் சராசரி ஒரு மாவட்டத்தில் 40 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளனவா..? அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை மையப்படுத்திய புதிய யுக்தியா…? அல்லது முதல் கட்டமாக வடக்கு கிழக்கில் புதிய பாடசாலைகள் அமைக்கப்பட்டு அதனோடே விகாரையும் அமைத்து மேலே அவர் குறிப்பிட்டது போன்ற “தேசிய பௌத்த கல்வி முறையை மேம்படுத்துவதற்கு மகா விகாரையுடன் தொடர்புபட்ட பௌத்த பாடசாலைகள்” அமைக்கும் உள் நோக்கம் கொண்டதா என சந்தேகம் எழுந்துள்ளத்உ.

இருப்பினும் இதனை எல்லாம் எம் தமிழ் அரசியல் கட்சிகளோ, அரசியல் தலைவர்களோ கண்டுகொள்ளப்போவதில்லை. ஏனெனில் அவர்களுக்குள் புடுஙுப்பாடு படவே அவர்களுக்கு நேரம் போதாமல் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலையில் 2009 இன் பின்னர் நாதியற்ற சமூகமாக தமிழினம் தவிக்கிறது என்பதே உண்மை.