Home செய்திகள் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

136
0

தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும், தமிழர் தேசம் மீதும் அளவற்ற பற்றுக்கொண்டு அதற்காக வாழ்ந்த மதிப்பிற்குரிய சட்டத்தரணி “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் அவர்கள் சிங்கள தேசத்தின் தலைநகரில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட துயர நாளின் 20ம் ஆண்டு இன்றாகும்.

குமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழர் தேசத்திற்கு ஆற்றிய அளப்பெரும் சேவையை பாராட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்கள் “மாமனிதர்” எனும் தமிழீழத்தின் உயரிய கெளரவம் வழங்கியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணி ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் புதல்வனும், முன்னாள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவரும், சட்டத்தரணியுமான கஜேந்திரகுமாரின் தந்தையும் ஆவார்.

குமார் பொன்னம்பலம் அவர்கள் 1982-10-20 அன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களின் உரிமையை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேபாளராக போட்டியிட்டு 173,934 வாக்குகள் (2.67%) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.