Home செய்திகள் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சமடையும் இலங்கை தூதுவர்கள்!

கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சமடையும் இலங்கை தூதுவர்கள்!

124
0

நாட்டுக்கு திரும்பிச் சென்றால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வெளிநாடுகளில் அடைக்கலம் தேடும் நிலையில் இலங்கை தூவுவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை இரு தூதுவர்கள், அவர்கள் தங்கியுள்ள நாட்டிலேயே அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள ஊடகமொன்றும் செய்தி வெளியிட்டு அத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் குறித்த இருவரும் முன்னாள் அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் எனவும், அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 14 பேருடைய பதவிக் காலத்தை இந்த புதிய அரசாங்கம் நிறைவுக்குக் கொண்டுவந்திருந்தது.

அத்துடன் பதவிக் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர், இதுவரையில் நாடு திரும்பாத இலங்கையின் தூதுவர்களுக்கு நாடு திரும்ப அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருனதமையும் குறிப்பிடத்தக்கது.