Home முக்கிய செய்திகள் அரச ஊழியர்களை கண்காணிக்க புலனாய்வு பிரிவினர்! கோட்டாவின் அதிரடி!!

அரச ஊழியர்களை கண்காணிக்க புலனாய்வு பிரிவினர்! கோட்டாவின் அதிரடி!!

95
0

அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க புலனாய்வு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்கவும், தவறான வழியில் ஆவணங்களை பெற்றுக்கொள்ளல், பணிகளை பெற்றுக்கொள்ளல் உட்பட்ட பல விடையங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவுமே புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபடுத்தவுள்ளனர்.