Home செய்திகள் யாழ்-அரியாலையில், திறந்து வைக்கப்பட்ட நாய்கள் சரணாலயம்!

யாழ்-அரியாலையில், திறந்து வைக்கப்பட்ட நாய்கள் சரணாலயம்!

163
0

கவனிப்பார் அற்று வீதிகளில் திரியும் நாய்களை பாதுகாப்பாகவும், மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பில்லாதவகையில் தனிமையான ஓரிடத்தில் பராமரிக்கும் வகையிலான “நாய்கள் சரணாலயம்” நேற்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு பகுதியில் தியாகி அறக்கொடை நிலையத்தினால் அமைக்கப்பட்ட குறித்த சரணாலயத்தை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் திறந்துவைத்தார்.

இதன் மூலம் வீதிகளில் நாய்களினால் இடம்பெறும் விபத்துக்கள் குறைவடையும் எனவும், நாய் கடிக்கு மக்கள் உள்ளாகும் வீதம் குறைவடையும் எனவும் நம்பப்படுகிறது.