Home செய்திகள் தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைதான “நேவி சம்பத்” பிணையில்...

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைதான “நேவி சம்பத்” பிணையில் விடுதலை!

82
0

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனும் கடற்படையின் முன்னாள் புலனாய்வாளரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சீலகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (01) பிணையளித்துள்ளது.

மஹிந்த ஆட்சிக்காலத்தில், இப்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலராக பொறுப்பில் இருந்த போது பல கடத்தல்கள், கொலைகளில் ஈடுபட்ட பின் சட்ட விரோதமாக மலேஷியாவுக்கு தப்பிச் சென்று மீண்டும் நாட்டுக்குள் வந்து தனது அடையாளங்களை மாற்றி தொம்பே பகுதியில் தென்னந் தோப்பொன்றின் பாதுகாப்பு அதிகாரியாக, பொல்வத்த கால்லகே அஷோக்க எனும் பெயரில் வலம் வந்த போதே கொழும்பு லோட்டஸ் வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை விசாரணை அறையின் அப்போதைய பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா (அண்மையில் சுவிஸ் சென்றவர்) தலைமையிலான குழுவினரால் 2018 ஆகஸ்ட் 13ம் திகதி “நேவி சம்பத்” கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.