Home செய்திகள் செல்வச்சந்நிதி ஆலய தொண்டமனாற்று நீரேரியில் இளைஞன் நீரில் மூழ்கி பலி!

செல்வச்சந்நிதி ஆலய தொண்டமனாற்று நீரேரியில் இளைஞன் நீரில் மூழ்கி பலி!

135
0

செல்வச்சந்நிதி ஆலயத்தின் பின்புறமாக உள்ள தொண்டமனாற்று நீரேரியில் நன்பர்கள் ஐந்து பேருடன் நீந்திக்கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

நன்பர்கள் ஐந்து பேருடன் நீந்திக்கொண்டிருந்த வேளையில், திறந்துவிட்ட்டப்பட்டிருந்த வான்கதவுகள் வழியாக வேகமாக வெளியேறிய நீரின் சுழியில் அகப்பட்டே குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என அறியப்படுகின்றது. இறந்த இளைஞன் மந்திகை காந்தியூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கந்தசாமி கஸ்தூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உறவினர்களால் நீண்ட நேரம் தேடலில் ஈடுபட்டும் கண்டுபிடிக்க முடியாததால் கடற்படையின் சுழியோடிகளால் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.