Home செய்திகள் யாழ் மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இடமாற்றம்:

யாழ் மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இடமாற்றம்:

89
0
Police question a local Jaffna resident on the street.

யாழ் மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 150 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாழில் 5 வருடங்களிற்கு மேலாக பணிபுரிந்து வருவதாகவும், நீதிமன்றங்களில் பணிபுரியும் பொலிசார் தவிர்ந்த ஏனையவர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கின் கஸ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்த பொலிசார், யாழிற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.