Home செய்திகள் 48 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு காங்கேசந்துறை துறைமுகம் விரிவாக்க பணி ஆரம்பம்!

48 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு காங்கேசந்துறை துறைமுகம் விரிவாக்க பணி ஆரம்பம்!

98
0

45 மில்லியன் இந்திய நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக துறைமுகத்தின் இருமருக்கிலும் இருந்து 48 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டு துறைமுக விரிவாக்கம் இடம்பெறுகிறது.

துறைமுகத்தின் வலது புறமாக (காங்கேசந்துறை சந்திப்பக்கமாக) 13 ஏக்கர் காணிகளையும், துறைமுகத்தின் இடது பக்கமாக (கீரிமலைப் பக்கமாக) 35 ஏக்கர் காணிகளும் இதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 7 மீற்றராக தற்போதுள்ள துறைமுகத்தின் கடல் ஆழத்தையும் 15 மீற்றர் வரை ஆழமாக்கி அதிக எடை கொண்ட கப்பல்களையும் உள்வாங்கும் நோகோடு இத்துறைமுக அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக போர்க்காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் (முதல் பெண் கரும்புலி கப்படன் அங்கையற்கண்ணியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட) துறைமுகத்தில் வைத்து தாக்கி அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களின் பாகங்கள் மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக துறைமுக விரிவாக்கக் குழு தெரிவித்துள்ளது.