Home செய்திகள் தமிழர் தாயகத்தில் பெளத்த சாசன, கலாச்சார அமைச்சின் உத்தரவில் அகழ்வு ஆராச்சி!

தமிழர் தாயகத்தில் பெளத்த சாசன, கலாச்சார அமைச்சின் உத்தரவில் அகழ்வு ஆராச்சி!

110
0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று இடங்கள் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆலயங்களின் அமைவிடம், வரலாறு, மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக கூறப்பட்டாலும் மறைமுகமாக இருந்ததை இல்லை என்றும் இல்லாததை இருந்ததாகவும் கூற முனைப்படும் செயலாகவே இது கருதப்படுகிறது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் வலிவடக்கு பிரதேசங்கள் கடந்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தமையும், அவ் விடங்களில் திட்டமிட்ட ரீதியில் ஏற்கனவே (சிலவேளைகளில்) புதைக்கப்பட்ட பெளத்த மத சின்னங்களை தோண்டி எடுத்து இது 200 ஆண்டுகள் பழமைவாந்தவை எனவும், அது பெளத்தர்களுக்கு உரித்தானது எனவும் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனெனில், பௌத்த சாசன மற்றும் கலாசார  விவகாரங்களுக்கான அமைச்சரின் உத்தரவுக்கு அமையவே, தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாக இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளமை வலுவான அச்சத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான இடங்களில் ஏதாவது அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.