Home செய்திகள் கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

93
0

புதுவருடப்பிறப்பான இன்று (01-01-2020) கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்தில் அராலி மேற்கைச் சேர்ந்த 29 வயதான செல்வநாயகம் அஜந்தன் மற்றும் கனகபுரத்தைச் சேர்ந்த 23 வயதான வரதராஜா ஜெனினன் ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு தம்புள்ளவில் இருந்து மரக்கறி ஏற்றிவந்த பார ஊற்தியும் (லொறி) உந்துருளியும் (மோட்டார் சைக்கிள்) நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

புதுவருடப்பிறப்பில் ஏற்பட்ட இந்த கோர சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.