Home செய்திகள் கிளிநொச்சியில் நடைபெற்று வரும் கவனயீர்ப்புப் போராட்டம்:

கிளிநொச்சியில் நடைபெற்று வரும் கவனயீர்ப்புப் போராட்டம்:

122
0

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பமாகி நடந்துவருகின்றது.

போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்காக வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் காலை 7 மணி முதல் பேருந்து சேவை ஆரம்பமாகியது.

பல நூற்றுக்கணக்கான மக்கள் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தவண்ணம் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.