Home தாயக செய்திகள் இலங்கையின் முதல்தர குத்துச்சண்டை வீராங்கனை சுலக்சனப்பிரியா கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

இலங்கையின் முதல்தர குத்துச்சண்டை வீராங்கனை சுலக்சனப்பிரியா கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

175
0

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற வவுனியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மர்மனான முறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் வசித்து வந்த அவரது வீட்டு கிணற்றிலிருந்தே குறித்த குத்துச்சண்டை வீராங்கனையான சிவானந்தம் சுலக்சனப்பிரியா (வயது19) வின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (29/12) ஞாயிற்றுக்கிழமை சுலக்சனப்பிரியாவின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் சுலக்சனப்பிரியாவை காணாத நிலையில் அவரை தேடியுள்ளனர்.

இதன்போதே குறித்த யுவதி அவரது வீட்டு கிணற்றிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வவுனியா காமினி மகா வித்தியாலத்தில் கல்வி கற்றுவரும் சுலக்சனப்பிரியா தனிமையில் அந்த வீட்டில் இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக வடமாகாண தமிழ் மாணவர்கள் கல்வியிலும், கண்டுபிடிப்புக்களிலும், குறிப்பாக விளையாட்டுத்துறைகளிலும் சிறந்து விளையாடி அகில இலங்கை ரீதியில் முன்னணியில் திகழ்வதும், தெற்காசிய, ஆசிய மட்டங்களில் பதக்கங்களை வென்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குத்துச்சண்டை வீராங்கனையான சுலக்சனப்பிரியாவின் மரணம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு இது கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.