தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய புலிகளின் குரல் வானொலியில் பல இக்கட்டான காலங்களில் எல்லாம் அயராது உழைத்து வந்த ஊடகப்பணியாளர் திரு.வீரன் சக்திவேல் அவர்கள் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார்.
தமிழீழ வானொலி, மற்றும் புலிகளின் குரல் வானொலியின் தொழில் நுட்பவியலாளரும், அறிவிப்பாளருமான, வீரன் சக்திவேல் அவர்கள் கடமையாற்றியவர் என்பதோடு, முன்னாள் போராளி தணியரசன் அவர்களின் தந்தையும் ஆவார்.
அவருக்கு “தமிழ்நாதம்” ஊடக குழுமமும் தமது அஞ்சலிகளை செலுத்திக் கொள்வதோடு அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்திருக்கும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
