Home முக்கிய செய்திகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த மாகல்கந்தே சுதந்த தேரர்!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த மாகல்கந்தே சுதந்த தேரர்!

105
0

தமிழ் மக்களை வைத்துக் கொண்டு ஏதாவது புரட்சி ஏற்படுத்த முயன்றால் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஏற்பட்ட நிலைதான் சுமந்திரனுக்கும் ஏற்படும்.

மேலும் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றும் கூட்டமைப்பின் உறுப்பினர் வெளியிடும் கருத்துக்கள் பாரதூரமானவை என பிக்குகள் என்ற ரீதியில் கண்டிக்கின்றோம் என சிஹலே ராவய அமைப்பின் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தமிழ் பிரிவினைவாதத்தை போசிக்கும், தமிழ் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும், சமஷ்டி கேட்கும், வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டும் என அறிக்கை வெளியிடும் இந்த பிரிவினைவாதத்தை நோக்காக கொண்டு செயற்படும் நபரே சுமந்திரன் என்றும் மேலும் சுமந்திரன் யாழ்ப்பாணம் போகும் போது வேட்டியுடன் செல்கின்றார். கொழும்பு வரும் போது வெள்ளைக்காரனைப் போல் கோட், சூட் உடன் வருகின்றார்.அவர் வெள்ளை வேட்டியுடன் சென்றாலும் இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் மறந்து விட்டனர் என மேலும் தெரிவித்துள்ளார்.(