Home செய்திகள் காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து உண்மையில் காணி அற்றவர்களுக்கு வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து உண்மையில் காணி அற்றவர்களுக்கு வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

94
0

தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கோரி இன்று (29/12) ஓமந்தைப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறும் குடிநீர் பிரச்சனைக்கு தாம் முகம் கொடுப்பதுடன் வீதிகளும் கிரவல் வீதிகளாக காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என 8 வருடங்களுக்கு முன்னர் ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு 800 இற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இருந்தும் இதுவரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதனால் ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகவும் காணப்படுவதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில், குறித்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே காணி உரிம பத்திரங்கள் வழங்கப்படாமையாலேயே மக்கள் அப் பகுதிகளில் குடியேறவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனவே காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கவேண்டும் எனவும், அதன் பின்னரும் காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து உண்மையில் காணி அற்றவர்களுக்கு வழங்கி அப்பகுதியில் மக்கள் அச்சமின்ற வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறியே இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.