Home செய்திகள் ஊடக வியலாளரை கெளரவித்து விருது வழங்கும் நிகழ்வு நாளை யாழில்:

ஊடக வியலாளரை கெளரவித்து விருது வழங்கும் நிகழ்வு நாளை யாழில்:

111
0

அடக்குமுறைகளுக்கு எதிரான அகிம்சை வழி போராட்டகாலத்திலும் பின்னரான ஆயுத வழி போராட்டகாலத்திலும் காத்திரமான பங்கை ஆற்றிய தமிழ் ஊடகவியலாளர்களை கௌரவித்தும், ஊக்குவிக்கும் முகமாக விருதுகளை யாழ்.ஊடக அமையம் இவ்வருடம் முதல் வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் (30/12/2019) திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யூ.எஸ்.விடுதி (US HOTEL) இல் நடைபெற உள்ள நிகழ்வில் முதல் தடவையாக விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அர்ப்பணிப்பு மிக்க ஊடகப பயணத்தில் வட-கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர். அத்தகைய ஊடகப் படுகொலைகளிற்கான நீதி வேண்டி யாழ்.ஊடக அமையம் நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டிருக்கிருப்பது அனைவரும் அறிந்ததே.

அடக்கு முறைகளுக்கு அஞ்சாது உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உன்னதமாக ஊடகப் பணியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு அஞ்சலி செலுத்தி, அந்தப் பொறுப்பை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல புதிய இளம் ஊடகவியலாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதற்காக முன்னெடுப்புக்களையும் கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.ஊடக அமையம் முன்னெடுத்துவருகின்றது.