Home செய்திகள் வணிகத்துறையில் முல்லை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழினி!

வணிகத்துறையில் முல்லை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழினி!

141
0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.