Home தாயக செய்திகள் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சாதனை நிலைனாட்டிய யாழ், முல்லை மாணவர்கள்!

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சாதனை நிலைனாட்டிய யாழ், முல்லை மாணவர்கள்!

205
0

நடந்து முடிந்த க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் “வர்த்தகப் பிரிவிலும்”, இதே கல்லூரியைச் சேர்ந்த கிருஷிகன் ஜெயநந்தரராசா எனும் மாணவன் உயிரியல் பிரிவிலும் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று யாழ் மாவட்டத்திற்கும் அக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதில் கிருஷிகன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் நிலையை எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போல், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான இரவிச்சந்திரன் யாழினி “வணிகத்துறையில்” முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று அம் மாவட்டத்திற்கும், அவரது கல்லூரிக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.

இவர் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், இவரது தந்தை பல ஆண்டுகளாக காணாமல் போயுள்ள நிலையில், போரில் கையை இழந்த தனது தாயின் அரவணைப்பில் கடும் இன்னல்களுக்கு மத்தியில் கல்வி கற்று சாத்தித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதே போல், “கலைப்பிரிவில்” யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை யாழ்/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவி பெற்றுள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாக நெடுந்தீவில் – நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவனான யேசுதாசன் கிறிஸ்துராஜன், கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்றுள்ளார்.