Home செய்திகள் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

76
0

மந்நாரில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம் சிறுனீலாசேனை பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் உயிலங்குளம் வட்டிப்பித்தான் மடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா ((வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து, உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலே, நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் குறித்த குடும்பஸ்தர் தங்கி இருந்த வீட்டிற்கு முன் வீதியில் வைத்து இனந்தெரியாக நபர்களினால் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதோடு, சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.