Home முக்கிய செய்திகள் “தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்தால், அதன் கருத்து தமிழர்கள் தேசிய கீதம்...

“தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்தால், அதன் கருத்து தமிழர்கள் தேசிய கீதம் பாடவேண்டாம் என்பதே”

120
0

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படுமென அறிவித்திருப்பதானது “தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்தால், அதன் கருத்து தமிழர்கள் தேசிய கீதம் பாடவேண்டாம் எனக் கூறுவதற்கு ஒப்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படுமென துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தமை தொடர்பில், யாழில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்தால், அதன் கருத்து தமிழர்கள் தேசிய கீதம் பாடவேண்டாம் என்பதையே கூறுகின்றனர்.தமிழர்கள் தேசிய கீதம் பாடக்கூடாது எனக் கூறினால் அதனை நாம் சந்தோசமாக ஏற்றுக்கொள்வோம்.

தேசிய வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதன் இன்னொரு அடையாளமே தேசிய கீதம் பாட வேண்டாமென அரசாங்கம் கூறுகின்றதாகும். தேசிய வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துள்ளன.நியாயமான, ஜனநாயக கோரிக்கைகள் ஏற்கப்படாமையின் காரணமாகவே தேசிய வாழ்க்கையிலிருந்து எம்மை விலக்கியதாக நாம் எண்ணுகிறோம்.

இதன்மூலம் ஒரு நாட்டில் உள்ள தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை அரசாங்கம் முறியடிக்கின்ற செயற்பாட்டை அரசாங்கம் செய்து வருகிறது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.