இலங்கையில் இம்முறை சூரிய கிரகணம் யாழ்ப்பாணம், மன்னார், மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களால் தெளிவாக பார்வையிடப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மிகவும் தெளிவாக காட்சி கொடுத்த சூரிய கிரகணம் அதற்கு முன்னும், பின்னருமாக வானில் பல மாற்றங்களை கொண்டுவந்து மக்களின் கண்களை கவர்ந்துள்ளது.

இம் முறை தோன்றிய சூரிய கிரகணம் “கங்கண சூரிய கிரகணம்” என வானியல் ஆராச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமையும், இதனை அவதானிக்க இலங்கையின் யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் அதிகளவான வெளிநாட்டவர்கள் கூடியிருந்தமஇயும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணத்தின் அசத்தலான படங்கள் இதோ.. (படங்கள்: கிரி & வதனி)