Home தாயக செய்திகள் ஆழிப் பேரலை காவுகொண்ட தம் உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி!

ஆழிப் பேரலை காவுகொண்ட தம் உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி!

114
0

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் தெற்காசிய நாடுகளை உலுக்கிய “சுனாமி” ஆழிப்பேரலையின் 15ம் ஆண்டு தினமான இன்று அதில் பல்லாயிரம் உயிர்களை காவு கொடுத்த இலங்கையிலும் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

இலங்கையின் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வடமராட்சிக் கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் சுனாமி நினைவு பொது ஆலயங்களில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலித்தனர்.

இதற்கமைய வடமராட்சி – உடுத்துறையிலும், முல்லைத்தீவு – கள்ளப்பாடு பிரதேசத்திலும், நடைபெற்ற நினைவு நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தியதோடு பல அரசியல் பிரமுகர்களும், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலித்தனர்.

இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, சுனாமி கீதமும் இசைக்கப்பட்ட போது அவ் இடங்கள் கண்ணீரால் நிறைந்தது.

கள்ளப்பாடு வடக்கு மற்றும் கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு மேல் இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட நிலையில் அந்த உறவுகளை நினைந்து கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட கொட்டகைகளில் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கான சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தி உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.