Home செய்திகள் இராணுவ சிப்பாயை தாக்கி துப்பாக்கி பறிப்பு – வவுனியாவில் பதட்டம்!

இராணுவ சிப்பாயை தாக்கி துப்பாக்கி பறிப்பு – வவுனியாவில் பதட்டம்!

110
0

வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாயை தாக்கி விட்டு துப்பாக்கியை பறித்து சென்றுள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடமை முடித்து தனிமையில் திரும்பிக் கொண்டிருந்த இராணுவ சிப்பாயையே இனந்தெரியாத நபர் தாக்கிவிட்டு துப்பாக்கியை பறித்து சென்றதாகவும், பறிக்கப்பட்ட துப்பாக்கி தற்போது கெகிராவை பிரதேசத்தில் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் காயமடைந்த இராணுவச் சிப்பாய் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.