Home உலக செய்திகள் தேசத்தின் குரலுக்கு பிரான்சில் நினைவேந்தல்:

தேசத்தின் குரலுக்கு பிரான்சில் நினைவேந்தல்:

139
0

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சில் நடைபெற்றது. 

நாம் தமிழர் பிரான்ஸ் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு 22/12/2019 நேற்றைய தினம் மாலை, பாரிஸ் நகரின் போர்த் து பனியோல் (PORTE DE BAGNOLET) என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், எழுச்சி நடனங்கள், எழுச்சிப்பாடல்கள், சிறப்பு கவிதைப் படைப்பு உட்பட பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன. நினைவுரைகளை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களான நாயகன், சுக்ளா ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.

அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களினால், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பான சிறப்புரையும், கலந்துரையாடலும் நடத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (றஞ்சித்-த15)