Home செய்திகள் மல்லாகம் அகதிகள் முகாமில் 30 வருடங்கள்ஆக வாழும் மக்களை சந்தித்தார் அமைச்சர் ஆ.தொண்டமான்!

மல்லாகம் அகதிகள் முகாமில் 30 வருடங்கள்ஆக வாழும் மக்களை சந்தித்தார் அமைச்சர் ஆ.தொண்டமான்!

64
0

யாழ்பாணம் – மல்லாகம், நீதிவான் முகாமில் கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி முகாங்களில் தமது வாழ்க்கையினை பல கஸ்டங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற உள்ள 53 குடும்பங்களை சேர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துரையாடினார்.

இன்று சனிக்கிழமை (21/12) காலை யாழ்பாணம் – மல்லாகம், நீதிவான் முகாமிற்கு சென்ற சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதோடு மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இதன் போது அமைச்சரிடம் கருத்து தெரிவித்த முகாம் வாசி ஒருவர், ஐயா… உங்களைப் போல் பலர் இங்கு வந்து குறை கேட்டு செல்கின்றனர். இருப்பினும் இதுவரை எமக்கு நல்ல வாழ்க்கை ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. எமது சொந்த நிலம் இருக்கும் போது இத்தனை ஆண்டுகளாக ஏன் நாம் இப்படி வாழ வேண்டும். எம்மை எமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடு செய்து தந்தீர்களே ஆணால் மிகவும் உதவியாக இருக்கும். அதன் பின் நாம் யாரிடமும் கை ஏந்த தேவையில்லை. ஒரு கிலோ மாவிற்கும் கால் கிலோ சீனிக்கும் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. என தன் வேதனைகளை அமைச்சர் முன் கொட்டினார்.

இந்த சந்திப்பின் போது ஆறுமுகன் தொண்டமானுடன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி மற்றும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.