
விசாரணைக்கு வருமாறு வந்த அழைப்பை ஏற்று கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்ற தனது கணவரை காணவில்லை என மனைவி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
வடமராட்சி, கெருடாவில் தெற்கைச் சேர்ந்த பரமு விஜயகுமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணால் போயுள்ளார்.
இது தொடர்பில் அவரது மனைவி இன்று (20/12) வெள்ளிக்கிழம்ஐ காலை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் கொழும்பு பயங்கரவ்ஆத குற்றத் தடுப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு கேடதற்கு அங்கு குறித்த நபர் வரவில்லை என பதில் வந்துள்ளது.
இதனால் அச்சத்தில் பொலிஸ் நிலையத்தில் கதறி அழுத மனைவியை சமாதானப்படுத்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.