Home செய்திகள் யாழ்-பல்கலை கலைப்பீட மாணவி சடலமாக மீட்பு!

யாழ்-பல்கலை கலைப்பீட மாணவி சடலமாக மீட்பு!

77
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கல்விகற்று வரும் கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தநிலையில் நேற்று மாலை இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலைவேளை வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போடவில்லை என கூறிக்கொண்டு வீட்டின் உரிமையாளர் வீட்டை சென்று பார்த்தபோதே மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.