Home முக்கிய செய்திகள் இலங்கையின் பாதுகாப்பு செயலரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்:

இலங்கையின் பாதுகாப்பு செயலரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்:

83
0

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பு இயல்பான சூழலில் இடம்பெற்றதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அவருக்கு நெருங்கிய இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

எனினும் இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்க தூதுரகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.