Home செய்திகள் அளவு கடந்த மணல் கொள்ளை – கிராமங்களை பாதுகாக்க மக்கள் போராட்டம்!

அளவு கடந்த மணல் கொள்ளை – கிராமங்களை பாதுகாக்க மக்கள் போராட்டம்!

82
0

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18/12) காலை சற்றுமுன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கைகளில் கண்டன பதாகைகளை தாங்கிய வாறு கலந்துகொண்டுள்ளனர்.

  • மணல் அள்ளும் உரிமத்தை அரசியல் வாதிக்கு வழங்காதே
  • அபிவிருத்தி எனும் பெயரால் வழங்களை சூறையாடாதே
  • இயற்கையை நீ அழுத்தால் இயற்கையார் நீ அழிவாய்
  • மணல் கொள்ளை மாபியாக்களை தடுத்து நிறுத்து
  • அழியும் கடலோரங்களுக்கு பாதுகாப்பு தா
  • கண்ணீரில் நனைந்த எம் மண்ணை களவாடிச் செல்வதா ?

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கைகளில் வைத்திருந்ததை காணமுடிந்தது.

ஆனால் மணல் அகழ்வை அனுமதித்து மக்களை அதற்கு எதிராக திசை திருப்பி விட்டு வேறு இடங்களில் நிறுத்த்தப்பட்டிருந்த பெளத்த விகாரை அமைப்பு கட்டுமானப்பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும், காடுகளில் மீண்டும் மரக் கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதடி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் அறியவந்துள்ளது.