Home உலக செய்திகள் ஜெனீவா மாநில நிர்வாக அதிகாரியாக தமிழ் பெண் கீர்த்தனா!

ஜெனீவா மாநில நிர்வாக அதிகாரியாக தமிழ் பெண் கீர்த்தனா!

97
0

சுவிஸ் – ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தமிழ் பெண்ணான தாமரைச்செல்வன் கீர்த்தனா நியமனமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு யுத்தத்தால் புலம்பெயர்ந்து வந்த பெற்றோர்களுக்கு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

தனது கல்வியிலும் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ள இவர், உயர் தேசிய வர்த்தக டிப்ளோமா, இளநிலை முகாமைத்துவ கணக்கியல்மானி என்ற பட்டங்களையும் பெற்றவராவார்.

தனது திறமையால் உயர் அதிகாரியாக இன்று வலம் வருகின்ற நிலையில் இவரை உலகத் தமிழ் மக்கள் வாழ்த்துவதுடன் தங்களது அரசியல் பிரச்சினைகளை சுவிஸ் அரசுகளோடு பேசுவார் எனவும் தமிழ் மக்கள், தாமரைச்செல்வன் கீர்த்தனா மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.