Home செய்திகள் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய கோரி சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடு!

சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய கோரி சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடு!

82
0

தேசிய நல்லிணக்கத்திற்கும் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் செயற்படும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சிங்கள தேசிய அமைப்பு முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதுடன் அவரைக் கைது செய்யுமாறும் கோரியுள்ளது.

அத்துடன் இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்வீகம் அல்லவென்றும், இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒரு பௌத்த நாடாக அடையாளப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்திற்கு எதிராகவே மேற்படி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்ட புனைகதைகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம். பாளி மொழி மூலம் புனைகதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை போலியான புனைகதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.