Home செய்திகள் எமது அமைப்பும், விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்றாக செயற்பட்டிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்: ரெலோ செல்வம்

எமது அமைப்பும், விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்றாக செயற்பட்டிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்: ரெலோ செல்வம்

83
0

எமது தமிழீழ விடுதலை இயக்கமும் (TELO) தமிழீழ விடுதலைப் புலிகளும் ((LTTE) ஒன்றாக இணைந்து செயற்பட்டிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் கட்சியின் விசேட மாவட்டக் கூட்டம் இடம்பெற்ற போதே அங்கு பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

தமிழர்களின் சாபமோ தெரியவில்லை எமக்குள் சகோதரப் படுகொலைகள் இடம்பெற்றது. இந்த சகோதரப் படுகொலைகளினால் சிங்களப் பேரினவாதிகள் எள்ளிநகையாடினர்.

இப்போது எமது கட்சிக்குள் பிளவு இல்லை. சிறிய கருத்துமுரண்பாடுகள் மட்டுமே. சிறிய பிரச்சினைகளுக்காக ரெலோ பலவீனமடையாது.

சகோதரப் படுகொலைகளினால் பாதிக்கப்பட்ட போது கூட நாம் (TELO) பலவீனமடையவில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO) இருந்து நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தலைமையில் “தமிழ் தேசியக் கட்சி” என்ற பெயரில் கட்சி ஒன்று நேற்று (15/12) ஆரம்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளமையும், அக் கட்சியின் செயலாளராக மூத்த அரசியல்வாதியும், ஏளோ இயக்கத்தின் மூத்த உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கமும், துணைத் தலைவராக சிவகுருநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.