Home செய்திகள் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

79
0

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பொது சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து திரு உருவப் படத்திற்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா ஆகியோர் அணிவித்தனர்.

தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.