Home Uncategorized கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்!

கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்!

107
0

269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கடலிலிருந்து மீட்டு அதில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) கடந்த 7ஆம் திகதி தலைநகர் கொழும்புடன் ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடியது. 

இலங்கைப் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வின் போது நினைவு முத்திரையும், முதல்நாள் உரையும் வெளியிடப்பட்டதுடன் துறைமுக நகரத்திட்டப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் கூடியிருந்த பெருந்தொகையான மக்களைப் பரவசப்படுத்தும் வகையில் கண்ணைக் கவரும் வானவேடிக்கைகளும் இடம்பெற்றன. 

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இத் துறைமுக நகரை உருவாக்கவென மண் அகழ்வு இயந்திரங்கள் கடற்படுக்கையிலிருந்து மணலை எடுத்து மேற்பரப்பில் விசிறி துறைமுக நகரத்திற்கென ஒதுக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் உருவாக்கும் வரை கடலிலிருந்து மணலை அகழ்ந்து கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருந்தன.

5 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் இந்த நிலப்பரப்பில் அமையவிருக்கின்ற சிறப்புவாய்ந்த “கொழும்பு துறைமுக நகரம்” இலங்கையின் நிதி மற்றும் வாணிப மையமாக சகல வசதிகளுடனும் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.